இலங்கைசெய்திகள்

ஜனாதிபதிக்கு புது வருட வாழ்த்து தெரிவித்த சீன ஜனாதிபதி

Sri Lanka-China friendship

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு புது வருடத்திற்கான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வாழ்த்து செய்தியை இலங்கைக்கான சீன தூதுவர் நேற்றைய தினம் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

புதிய வருடத்திலும் சீனாவுடனான உறவு சிறந்த வகையில் பேணப்படும் என அந்த வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சீன வெளிவிவகார அமைச்சர் வேன் வீ எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.

அவருடன் தூதுக்குழுவொன்றும் நாட்டை வந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button