இலங்கை அரசு, பல வழிகளிலும் சர்வதேசத்திடமிருந்து தப்பிச் செல்கிறது.என்றாலும் அரசின் மேல் கத்தி தொங்குகிறது என்பது ஒரு மிரட்டலாகவே அமையும் என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் கண்காணிப்பின் கீழ்,தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கான ஆதாரங்களை திரட்டும் நோக்கில் அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது.அதனை அன்று இருந்த கோட்டா அரசு தற்போது உள்ள ரணில் அரசு நிராகரித்துள்ளது.
இவ்வாறு புலம்பெயர் தமிழர்களின் ஆதரவுடன் சான்றுகளைத் திரட்டி சர்வதேச நீதி மன்றில் கொடுத்தாலும் எந்தப் பயனும் இல்லை.இது தொடர்பில் தமிழர்கள் கற்பனையை வளர்க்க வேண்டாம்.சான்று திரட்டும் பொறிமுறை என்பது ஒரு மிரட்டல்.அரசை நெருக்கடிக்கு தள்ளும் ஒரு உத்தி.
இவ்வாறு ஆதாரங்களை திரட்டி வைப்பதன் மூலம் அரசின் தலைக்கு மேலே ஒரு கத்தி தொங்குவது போலவே அமையும். ஆகவே இது வேண்டாம் என அமைச்சர் அலி சப்ரி போராடி வருகின்றார்.அரசுக்கு எதிராக ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது சந்தோசம் தான்.
இந்த இடத்தில் தமிழர்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும். ஜெனிவா அமர்வில் இலங்கை பற்றி சமர்பிக்கப்படும் விடயங்கள் வெறுமனே மனித உரிமை மீறலாகவே செல்லும்.ஆனால் இந்த வியடங்களை நாம் வெளியே சர்வேதச அரங்குக்கு கொண்டு செல்ல வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.