சாவகச்சேரி மட்டுவில் பகுதியை சேர்ந்த கனடாவில் வசிக்கும் சமூக சேவையாளர்
பொண் கந்தையாவின் பவள விழா ஆண்டை நினைவு படுத்தும் முகமாக அவரது பெயரில் 10 லட்சம் ரூபா செலவில் அவரின் பிள்ளைகளால் தென்மராட்சியில் பல சமூக நல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .
அந்த வகையில் முதலாவதாக நேற்றைய தினம்( 30/11/21) கைதடி நுணாவில் பகுதியை சேர்ந்த 50 குடும்பங்களுக்கும் மட்டுவில் தெற்கு பகுதியை சேர்ந்த 33 குடும்பங்களுக்கும் தலா 3000 பெறுமதியான உணவுப் பொருட்கள் மட்டுவில் வளர்மதி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் வழங்கி வைக்கப்பட்டிருந்தது .
இதைவிட 120 மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்புக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் , முன் பள்ளிக்கான ஊக்குவிப்பு , ஆசிரியர்களுக்கான கற்பித்தல் ஊக்குவிப்பு , சாவகச்சேரி மீசாலையைச் சார்ந்த ஒருவருக்கான வாழ்வாதார தொழில் உதவி ,என இன்னும் பல உதவிகள் படிப்படியாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிய வருகிறது .பொன் கந்தையா அவர்கள் கல்வியால் வறுமையை ஒழிப்போம் என்ற எண்ணக்கருவிற்கிணங்க கடந்த காலங்களில் தென்மராடசியிலு ம் ,வன்னியிலும் பல உதவித் திட்டங்களை சுயமாக முன் வந்து செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது .
( ஐவினஸ் மட்டுவில் செய்தியாளர்)