கல்விபுலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதி

புலமைச்சிகரம் வே . அன்பழகன் ஞாபகாரத்த கருத்தரங்கு தொடரில் இன்று பலமைச்சுடர் பிரதம ஆசிரியரின் வினாத்தாள்!!

Seminar

தரம் 5 மாணவர்களுக்காக 2000ம் ஆண்டிலிருந்து கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்து புலமைச்சுடர் கையேட்டின் பிரதம ஆசியராகவும் விளங்கிய கொழும்பு – சென்லூசியஸ் கல்லூயின் பிரதிஅதிபர், பிரபல புலமைப்பரிசில் ஆசிரியர் து. திலீப்குமார் அவர்களின் கருத்தரங்கு நாளை திங்கட்கிழமை இரவு 8.30 தொடக்கம் 9. 30 வரை இடம்பெறவுள்ளது.

இவரது வினாத்தாளைப் பரீட்சை வினாத்தாளாக கருதி பெற்றோர்கள் மாணவர்களைப் பயிற்சி செய்விக்குமாறு தெரிவிப்பதுடன்,

அன்றைய கருத்தரங்கில் முழுமையான தெளிவுபடுத்தல்கள் இடம்பெறவுள்ளது என்பதுடன் சில முரண்பாட்டு விடைகளைக்கொண்ட வினாக்களையும் தனது அனுபவத் திறனிற்கு ஏற்ப இவர் தெளிவுபடுத்தவுள்ளார்.

மாணவர்கள் உடனுக்குடன் தமது சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கான வாய்ப்பும் நாளைய கருத்தரங்கில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கீழ் காணும் சந்தேகங்களும் ஆசிரியர் து. திலீப்குமார் அவர்களால் விளங்கப்படுத்தப்படும்.

சமச்சீர் கோடுகள் குறித்த விளக்கம், இலங்கையின் தேசிய மலர் நீலோற்பலமா, நீல அல்லியா என்ற தெளிவுபடுத்தல், இலங்கையின் தேசிய கொடியில் நிறமாற்றங்கள், வாக்கியத்திற்குப் புள்ளி வழங்கப்படும் முறை போன்ற விடயங்கள் தெளிவுபடுத்தப்படும்.

Related Articles

Leave a Reply

Back to top button