இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

மாணவர்கள் பாடசாலை செல்வது தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!

schools

மீண்டும், பாடசாலைகளில் மாணவர்களின் புத்தகப் பைகளைப் பரிசோதிக்கும் நடைமுறை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், எதிர்காலத்தில் இது தொடர்பான சுற்றறிக்கை ஒன்றும் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தற்போது, பாடசாலை மாணவர்கள் மத்தியில் நுட்பமான வழிகளில் பல்வேறு போதைப் பொருட்கள் பரிமாற்றப்படுகின்றன.எனவே இது தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களை நாம் பாதுகாக்க வேண்டும். இது தொடர்பில் அடுத்த வாரம் நடவடிக்கை எடுக்கப்படும்.

பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சமூகம் இவ்விடயத்தில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button