பாடசாலை மாணவர்களின் நன்மை கருதி இன்று முதல் விசேட பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன் பணிப்பாளர் நிலான் மிராண்டோ தெரிவிக்கையில் முதல் கட்டமாக மேல் மாகாணத்தில் இந்தச் சேவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.
அதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறியுள்ளார்.
எரிபொருள் இன்மை காரணமாக அதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடாதுள்ளன எனவும் எரிபொருள் பெறுவதற்கான வழி குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் சீரான முறையில் எரிபொருள் கிடைக்கும் பட்சத்தில் பேருந்து சேவைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.