இந்தியாசெய்திகள்

தொழிநுட்ப உலகை இயக்கும் இந்தியர்கள் – 1

Satya Nadella

சத்யா நாதெல்லா – மைக்ரோசாஃப்ட்

1967-ல் ஹைதராபாத்தில் பிறந்த நாதெல்லா மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் இளங்கலைப் பொறியியல் படிப்பையும், விஸ்கான்ஸின் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பையும் முடித்தார். அதன் பின்னர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்தார். 1992-ல் மைக்ரோசாஃப்டில் சேர்வதற்கு முன் சன் மைக்ரோசிஸ்டம் என்ற அமெரிக்க நிறுவனத்தில் பணிபுரிந்தார் . மைக்ரோசாஃப்டில் பல முக்கிய பொறுப்புகளில் பதவி வகித்திருக்கிறார். மைக்ரோசாப்டின் க்ளவுடு சேவைகளை மேம்படுத்தியதில் அவருடைய பங்கு முக்கியமானது. 2014-ல் பில் கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் பால்மருக்கு அடுத்தபடியாக மைக்ரோசாப்டின் மூன்றாவது தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார் சத்யா நாதெல்லா. மைக்ரோசாஃப்ட்டின் பலம் பலவீனம் என்னவென்று அறிந்து மீண்டும் வளர்ச்சி பாதையில் அந்த நிறுவனத்தை அழைத்துசென்றதில் சத்யா நாதெல்லாவுக்கு முக்கிய பங்குண்டு! நன்றி – விகடன்

Related Articles

Leave a Reply

Back to top button