“மக்களின் இரத்தத்தை உறிஞ்சுபவர்கள் இரத்தப்போக்கு ஏற்பட்டே மரணிப்பார்கள்.”
- இவ்வாறு ஐக்கிய பிரஜைகள் ஒன்றியத்தின் ஒருங்கமைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கடந்த இரு தினங்களுக்குள் அரசிலுள்ளவர்கள் உட்கொண்ட உணவு தொடர்பான விடயங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
அரசில் சுவாசிப்பவர்கள் இருப்பார்களாயின் அவர்கள் உட்கொண்ட உணவுகள் சமிபாடு அடையுமா என்றே கேட்க விளைகின்றோம்” – என்றார். செய்தியாளர் – சுடர்