உப்பு இறக்குமதிக்கு ஜனாதிபதியினால்,தடை செய்யப்பட்டதன் பின்னர் உள்ளூர் உப்பு உற்பத்தியில் அதிக இலாபம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இலாபம் காரணமாக உப்பு நிறுவனம்இ தமது 1இ600 ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாகவும் விசேட கொடுப்பனவை வழங்கியதாக அதன் தலைவர் நிஷாந்த சந்தபாரண தெரிவித்துள்ளார்.
வங்கிகளிடம் இருந்து பெறப்பட்ட 30 கோடி ரூபாவினை செலுத்தியதன் பின்னர் 2021 ஆம் ஆண்டில் இலாப சாதனையாக 17 கோடி ரூபா பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில்இ புத்தளம் பகுதியில் உப்பு உற்பத்திக்கு ஏற்ற 400 ஏக்கர் விஸ்தீரணமான நிலத்தை கையேற்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.