இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் எவ்வித உலோகங்களும் கலக்கப்படவில்லை என முன்னெடுக்கப்பட்ட மாதிரி ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் தீங்கை ஏற்படுத்தும் உலோகங்கள் கலந்துள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்ததுடன், விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவும் சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் மாதிரிகள் பெறப்பட்டு, சர்வதேச அங்கிகாரம் பெற்ற தனியார் ஆய்வுகூடம் ஒன்றுக்கு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
இதன்மூலம் அரிசியில் எவ்;வித உலோக பொருட்களும் கலக்கப்படவில்லை என அறிக்கையொன்றின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.