முருகப்பன் நடேசலிங்கம்- கோகிலபத்மப்பிரியா மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகளான கோபிகா மற்றும் தர்னிக்கா ஆகியோருக்கு Biloela நகரில் வசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்வுள்ளது.
தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி வந்த இவர்களுக்கு பல வருடங்களின் பின்னர் குயின்ஸ்லாந்தில் உள்ள Biloela நகரில் குடியேற அனுமதி வழங்கப்படவுள்ளது.
தாம் வழங்கிய உறுதிமொழியைத் தொடர்ந்து , தேர்தல் வெற்றியின் பின்னர் தொழிற்கட்சியின் மேற்கு அவுஸ்திரேலியாவின் பிரேன்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள Madeleine King நேற்று மீண்டும் இதனை உறுதிப்படுத்தியிருந்தார்.
அதேவேளை முருகப்பன் குடும்பத்தின் நண்பியும் அவர்களுக்கு ஆதரவான நீண்டகால போராளியுமான Angela Fredericks தொழிற்கட்சியின் அன்டனி ஹெல்பனிஸின் வெற்றியை நேற்று மாலை முருகப்பன் குடும்பத்தினருடன் பகிர்ந்துக்கொண்டதாக கூறியுள்ளார்.
மிக நீண்ட, துன்பமான கதை இறுதியில் முடிவுக்கு வரும் என நம்புவதாகவும் Angela Fredericks தெரிவித்துள்ளார்.