இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை அதிகரிக்க கோரிக்கை

சீனிக்காக விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டு விலையை 25 ரூபாவினால் அதிகரிக்குமாறு சீனி இறக்குமதியாளர்களின் சங்கம் கோரிக்கை விடுத்திருக்கின்றது. சீனி இறக்குதியாளர்கள் 10பேர் கைச்சாத்திட்டு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ்வுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்படுள்ளதாவது,

தேசிய மட்டத்தில் உற்பத்திசெய்யப்படும் சீனி 3 ஆயிரம் மெட்ரிக்தொன் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. 

தற்போது விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டு விலைக்கு சீனி விற்பனை செய்ய முடியாது. அத்துடன் இறக்குமதியாளர்களிடம் தற்போது 20 ஆயிரம் மெட்ரிக் தொன்னுக்கும் குறைவாகவே சீனி இருக்கின்றது.

அத்துடன் சீனி இறக்குமதிக்கு அனுமதி வழங்கி இருந்தாலும் வங்கி ஊடாக 6மாதங்களுக்கு செலுத்தவே கடன்கொடுப்பனவு உத்தரவு பத்திரம் திறக்கப்பட்டிருக்கின்றது.

அதனால் சீனி மெட்ரிக்தொன் அலகு ஒன்றின் விலை 30டொலரினால் அதிகரிக்கின்றது. அதன் காரணமாக சீனி விலை மேலும் அதிகரிக்கின்றது. இதன் காரணமாக  சீனி இறக்குமதி செய்யாமல் இருப்பதற்கு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் தயாராகி வருகின்றனர்.

இதேவேளை, சீனி இறக்குமதிக்கான வரி 25சதமாக குறிப்பிட்டு நிதி அமைச்சு கடந்த 14ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்படுள்ளது.

அது 6மாதங்களுக்கு மாத்திரமாகும். நுகர்வோர் நடவடிக்கை தொடர்பான அதிகாரசபை கடந்த செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி விடுத்திருந்த வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம், வெள்ளை சீனி ஒரு கிலாேவின் கட்டுப்பாட்டு விலை 122ரூபா எனவும்  சிவப்பு சீனி 125 ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதியாளர்கள் விற்பனை செய்யவேண்டிய மொத்த சில்லரை விலை 116ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button