5 முதல் 17 வயதுக்கு இடைப்பட்ட வயதுடைய மாணவர்களில் பத்தில் இருவர் மந்த போசணையுடன் உள்ளதாக இலங்கை போசணை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது.
பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொவிட-19 பரவலைத் தொடர்ந்து எதிர்வரும் காலத்தில் ஏற்படக்கூடிய உணவுத்தட்டுப்பாடு தொடர்பில் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் மக்கள் தற்போது கொள்வனவு செய்யும் உணவுப் பொருட்களில் ஊட்டச்சத்து போதுமானதாக இல்லை எனவும் இலங்கை போசணை வைத்திய சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.