இலங்கைசெய்திகள்

தற்போதைய நாட்டுநிலை தொடர்பில் ரணில் விக்ரமசிங்க கருத்து!!

Ranil Wickramasinghe

முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க

“தேசிய அரசு என்பதற்கு அப்பால், இணக்கப்பாட்டுடனான தேசிய வேலைத்திட்டமொன்றே தற்போது அவசியம்.”

எனத் தெரிவித்தார்.

கொழும்பு, கிருலப்பனைப் பகுதியில் நேற்று நடைபெற்ற கட்சி மறுசீரமைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டு, பாரியதொரு அலைக்குள் சிக்கியுள்ளது. அதுமட்டுமல்ல எதிர்வரும் ஜுன் மாதம் கடன் செலுத்த வேண்டியும் உள்ளது. எனவே, தேசிய அரசு என்பதற்கு அப்பால், இணக்கப்பாட்டுடனான தேசிய வேலைத்திட்டமொன்றே தற்போது அவசியம்.

சர்வகட்சி மாநாட்டுக்கு முன்னர், சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை அரசால் வெளியிடப்படும் எனவும் நம்புகின்றோம்” – என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button