இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
உலகின் சிறந்த 6 விஞ்ஞானிகளில் இலங்கைப் பேராசிரியர் தெரிவு!!
Srilanka

உலகின் சிறந்த ஆறு இளம் விஞ்ஞானிகளில் (நோய் எதிர்ப்பு நிபுணர்கள்) ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவாகியுள்ளார்.
.ஆறு இளம் விஞ்ஞானிகளில் ஐவர் பிரித்தானிய பிரஜைகள் என்பதுடன் அவர்களில் இலங்கை விஞ்ஞானி ஒருவர் தெரிவு செய்யப்பட்டமை விசேட அம்சமாகும்.
இம்யூனாலஜி விருதுகள் என்பது உலகப் புகழ்பெற்ற மருத்துவ விருது வழங்கும் விழாவாகும், மேலும் உலகம் முழுவதிலுமிருந்து முப்பத்திரண்டு விஞ்ஞானிகள் விருதுகளைப் பெற ஆறு பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.