பிரியந்த குமார தியவடன பாகிஸ்தானின் சியல்கோட் நகரில் பயங்கரவாத கும்பலினால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதையடுத்துஇ சர்வதேச தரத்திற்கு அமைவாக இயங்கி வரும் அந்நாட்டு தயாரிப்பு நிறுவனங்களில் கணக்காய்வு பணிகளை மேற்கொள்வதற்குஇ வெளிநாட்டு கணக்காளர்கள் வருகை தர மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
பாகிஸ்தானில் உள்ள சில நிறுவனங்களில் இலங்கையை சேர்ந்த கணக்காய்வு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களே பணியாற்றிவருகின்றனர் என்பதால் இலங்கை கணக்காளர் பிரியந்த கொல்லப்பட்டதையடுத்து அவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல மறுப்பு தெரிவித்து வருவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் நினைவாக நேற்று இரவு இஸ்லாமாபாத்தில் மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
நேற்று உயிரிழந்த பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியை கணேமுல்ல – பொல்ஹேன பொது மயானத்தில் இடம்பெற்றது.