இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் இலங்கை வரக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அவருக்கு முன்னதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக ராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பினை வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயங்கள் இடம்பெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கடந்த நாட்களில் இந்தியாவுக்கு விஜயம் செய்து, இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் வெளிவிவகார செயலாளர் ஆகியோரைச் சந்தித்திருந்தார். இந்த பின்னணியிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது.