இலங்கைசெய்திகள்

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து யோசனை!!

Price of fuels

எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், அரசாங்கத்திடம் மீளவும் யோசனை முன்வைத்துள்ளது.

விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு இந்த யோசனையை அனுப்பி வைத்துள்ளதாக, கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும், குறித்த யோசனை தொடர்பில் இதுவரையில் எவ்வித பதிலும் கிடைக்கப்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ள நிலையில், எரிபொருட்களின் விலைகளையும் அதிகரிக்கவேண்டிய அவசியத்தன்மை ஏற்பட்டுள்ளதாக கனியவள கூட்டுத்தாபன தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை கனியவள கூட்டுத்தாபனம், தற்போது டீசல் ஒரு லீற்றருக்காக சுமார் 50 ரூபா நட்டத்தையும், பெற்றோல் ஒரு லீற்றருக்காக சுமார் 15 ரூபா நட்டத்தையும் எதிர்நோக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறிருப்பினும், முன்னதாக கருத்து தெரிவித்திருந்த வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, டீசல் ஒரு லீற்றருக்காக 35 ரூபாவும், பெற்றோல் ஒரு லீற்றருக்காக 5 ரூபாவும் நட்டம் ஏற்படுகின்றதென, கனியவள கூட்டுத்தாபனம் அறியப்படுத்தி இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இதேநேரம், லங்கா ஐ.ஓ.சி நிறுவனம், கடந்த ஆறாம் திகதி நள்ளிரவு முதல், எரிபொருட்களின் விலைகளை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button