உலகம்செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரையில்!!

President of Ukraine

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியை 2022ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்குமாறு ஐரோப்பிய அரசியல்வாதிகள் நோபல் குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசுக்கான பரிந்துரை செயல்முறையை மீண்டும் விடுக்குமாறு நோபல் குழுவிடம் கேட்டுள்ளதாகவும் ஜெலன்ஸ்கியை பரிந்துரைக்குமாறும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமைதிக்கான நோபல் பரிசுக்கான பரிந்துரைகள் மார்ச் 31ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மார்ச் 11 அன்று, ஐரோப்பிய அரசியல்வாதிகள் நோர்வே நோபல் குழுவிற்கு கடிதம் எழுதி, அமைதிக்கான நோபல் பரிசுக்கான பரிந்துரையை மார்ச் 31, 2022 வரை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் விழா வரும் டிசம்பர் 10ம் திகதி ஒஸ்லோவில் நடைபெறுகிறது. அமைதிக்கான நோபல் பரிசுக் குழுவின் கூற்றுப்படி, 2022 அமைதிக்கான நோபல் பரிசுக்கு 343 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர், அதில் 251 தனிநபர்கள் மற்றும் 92 நிறுவனங்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button