தற்போதைய நிலையில் தேவைக்கு அமைய எண்ணெய் கிடைக்காவிடத்து, நாளாந்தம் இரண்டரை மணிநேரத்திற்கு மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் மின்சார சபை அவதானம் செலுத்தியுள்ளது.
இதற்கமைய மின்சாரத்தை துண்டிக்கும் நேரம் தொடர்பில் தற்போது கலந்துரையாடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முற்பகல் 11 மணிமுதல் பிற்பகல் 6 மணிவரையிலான காலப்பகுதியில் ஒரு மணிநேரம் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதவிர, பிற்பகல் 6 மணிமுதல் 9 மணி வரையிலான காலப்பகுதியில் 45 நிமிடங்கள் என்ற அடிப்படையில் இரண்டு தடவைகள் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுகின்றது.
எவ்வாறாயினும், இது தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனியவள கூட்டுத்தாபனத்திடம் இருந்து மின்னுற்பத்திக்கு தேவையான உராய்வு எண்ணெய் மற்றும் டீசல் என்பன கிடைக்காவிடத்து மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் இன்று மற்றும் நாளைய தினங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.