கவிதைமுத்தமிழ் அரங்கம்.

ஏழை வாழ்வு – கோபிகை!!

poem

சுமை தாங்கியாய்
கனக்கிறது மனம்…
அன்றாட வாழ்வினை
அடிநகர்த்தும் பாரத்தில்…

பசித்த வயிறு
தெறித்து தகிக்கிறது.
ஊமைக் கனவுகள்
ஓரமாய் கிடக்கிறது….

வாளிகள் வெறுமையில்
வக்கிரமாய் சிரிக்கிறது…
பசியை அடக்கிப்பார்
மானிடா நீ என்றே…

ஏழைக்கு பல்லக்கு
அன்றாட உணவுதானே
அதுவும் அற்றதால்
அழுகிறது மனப்பூங்கா…

குடிசையில் கும்பிகள்
கொதிக்கிறது நாளாந்தம்…
வெள்ள நீர் உள்ளே வந்து
அணைக்கிறது தீயை…

‘படைத்தவன் படியளப்பான்’
சொல்லவும் வழியில்லை
பாவம் அவர் பாடு
இதைவிட திண்டாட்டம்…

இரக்க மனதில்லை
இறக்கும் வயதில்லை
ஒப்பனைகள் கொண்ட உலகில்
கற்பனைகள் ஏராளம்…

Related Articles

Leave a Reply

Back to top button