கவிதைமுத்தமிழ் அரங்கம்.

பூமகள் மகிழ்ந்திட நிறைவாகும்…!

poem

பச்சைய கூட்டங்கள் பூமழை
தூவியே வரவேற்கும்..
பசுமையின் காதலில் சுற்றிலும் நிறைந்திடும் இசையாகும்…
பசும்மர இலைகளும் மகிழ்வலை வீசியே கவி பாடும்..
பனித்துளி வீழ்ந்தே ஒவ்வொரு இலையும் பூவாகும்…
அத்தனை அழகும் ஒப்பனை செய்திடும் இடமாகும்..
சொர்க்கமும் தோற்றிடும் கந்தர்வர் உலவிடும் வனமாகும்…
மரக்கிளை அசைவினில் மங்கல இசையிங்கு அரங்கேறும்..
பூங்குயில் பாடிட பூமகள்
மகிழ்ந்திட நிறைவாகும்…
உலவிடும் நேரம் உணர்வுகள்
பூத்திட மணமாகும்..
கனவுகள் கண்களில்
நிரந்தரமாகவே குடியேறும்…
ஜெகன் மோகன்

Related Articles

Leave a Reply

Back to top button