கவிதைமுத்தமிழ் அரங்கம்.

வழி -கவிதை!! { கவிஞர் விஜயகிருஷ்ணன்}

poem

சில பாதைகள்
சருகுகளைச்
சூடியிருக்கும்…

சில மணலில்
தணலேற்
றிருக்கும்…

சில மகரந்த
உதிர்ப்புகளில்
காற்றுடன்
கைகுலுக்கும்…

சில
வான நீர்க்கடனை
வாங்கி
யிருக்கும்…

சில
பாறைக்கல்
மனமாயிருக்கும்..

சில ஒன்றுமில்லாம
லிருக்கும்…

காலமும் படர்ந்த வாழ்க்கையும்
நிற்க நேரமில்லாமல் அவரவர் வழிகளில்….

கவிஞர் – விஜயகிருஷ்ணன்

Related Articles

Leave a Reply

Back to top button