கவிதைமுத்தமிழ் அரங்கம்.

கிராமத்தானின் அன்பு – காரையன் கதன்!!

poem

கெஞ்சலுடன் கொஞ்சலாய்
ஆசையாய் இருக்கென்று
ஆறு மாத வயிற்றுடன்
வடி மீன் கேட்கிறாள்,
என் ஆசை பொஞ்சாதி.

புள்ள வயிற்றுக்காறி
ஆசையாய் தான் கேட்க
அத்தாங்கு தானேடுத்து
வாய்க்கால் நான் இறங்கி
வடிமீனும் தான் பிடித்து
வீடு வந்து சேர

சூரியனும் தலைக்கு மேல்
தானே நின்றான்.

பக்குவமாய் மீனறுத்து
உப்பிலே தான் நனைத்து
மாங்காய் போட்டால் நல்லா
இருக்கும் என்று
மனம் திறந்து சொன்னவளிடம்

ஓடி வாரேன் நான் என்று
ஒரு மைல் தான் நடந்து
கள்ள மாங்காய் ஒன்று பிடுங்கி
தோல் சீவி நான் நறுக்கி
சொதி போல காய்ச்சி

சுடு சோறு போட்டெடுத்து
வடிமீன் கறி வைத்து
கை நிறைய ஊட்டி விட்டேன்.

கலங்கிய கண்களுடன்
கன்னத்தில் முத்தமிட்டாள்.

வாய்க்கால் இறங்கி ஏறியதும்
மாங்காய்க்கு ஓடியதும்
களைப்பற்றுப் போனது
நிரந்தரமாகவே.

அத்தாங்கு எடுத்து வைக்கிறேன்
நாளையும்
வடி மீன் வடிக்கப்போக என
நான் கிராமத்தான்……

Related Articles

Leave a Reply

Back to top button