என் மௌனம் கலையும் நேரம்
இருள் சூழ்ந்து கொள்கிறது
நீ அருகில் இல்லாத போதும்
அசைந்தாடும் காற்றாடியாய்
காண்பவை யாவிலும் உன்னுருவமே காட்சிகளாக
எந்தன் தேடல்களில் வியாபித்துள்ளது நீதானே
கண்ணீரைத் துடைக்க நீயருகில்
இல்லையே என
பலதடவை அழுதிருக்கிறேன்
உனக்காக சிந்திய கண்ணீரின்
உப்பினால்
எனது உடல் துருப்பிடித்துக்கிடக்கிறது
இனம் புரியாதே தேடலும் நேசமும்
உன்னிடத்தில் மட்டுமே
முற்றுப்புள்ளியிடா வசனத்தைப்போல
தொக்கி நிற்கிறேனே
உன்னுடைய நினைவுகள் இல்லாத தருணங்களில்
என்னிடத்தில் நானே தோற்றுப்போகிறேன்
தூக்கம் தொலைத்த பொழுதுகளில்
எல்லாம்
உன்னை நினைத்து களைத்துப்போன
இதயம்
இயங்க மறுக்கிறது
மழைக்காக ஏங்கும் பூச்செடியைப்போல
தவித்திருக்கிறேன்
மனதின் அடிவேரில் பதிந்துவிட்டது உந்தன் நினைவுகள்
மோகனமே
உளிபட்டு வலியைத்தாங்கிய சிலையாகிக் கிடக்கிறது
உன்னை நினைத்த பேதையின் மனம்.
Leave a Reply