குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்..
யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாகத் தெரிந்து விடும்..!
சிலநேரங்களில் சினத்தில் விலங்குகளை
மிஞ்சுகிறான் மனிதன்….
பல நேரங்களில் அன்பில் மனிதனை மிஞ்சுகிறது விலங்குகள்..!
ஓட்டப்பந்தயத்தில் கால்கள் எவ்வளவு வேகமாக ஓடினாலும்..
பரிசு கைக்குத்தான் கிடைக்கும்..!
தென்னை மரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும்
உண்டு..
திண்ணையிலிருந்து விழுந்து செத்தவனும் உண்டு..!
உனக்குள் ஒரு விளக்கு இருக்கிறது..
அதை அணையாமல் பார்த்துக் கொள்..
அது தான் உன் சுய அறிவு..!
முயற்சியில் வரும் தவறுகள் பிழையில்லை..
தவறு வருமோ என்று முயலாமல் இருப்பதே மிகப் பெரிய பிழை..!
ஆயிரம் தோல்விகள்,
வெற்றிக்குத் தகுதியானவன் நீ இல்லை என்று உரக்கச்
சொல்கிறதா..!
நினைவில் கொள்….
இலட்சம், கோடி அணுக்களையாவது வெற்றி பெற்ற பின் தான்….
நீ ஒற்றை மனிதனாய் வலம் வருகிறாய்..!
மனிதனாய் பிறப்பதே மாபெரும் வெற்றி தான்..
தடைகளைத் தகர்த்தெறி..!
மீன் கரைக்கு வந்தால்..
எறும்பு மீனைச் சாப்பிடும்..
அதுவே….
எறும்பு நீருக்குப் போனால்..
மீன் எறும்பைச் சாப்பிடும்..!
அது போல் தான்..
எல்லோருக்கும் ஒரு
காலம் வரும்..!
காரணமே இல்லாமல் நம்
வாழ்க்கையில் வரும் சிலர்..
காரணமே இல்லாமல் விலகுவார்கள்..!
இறுதி வரை புதிராய் வாழ்க்கை தொடரும்..
காரணமில்லாமல்..மனதிற்குப்
பிடித்தவர்களை
தொலைவில் வைப்பதும்..
தொலைத்து விடுவதும் தான்
இந்த விதியின் தொழில்..!
படைத்தவனின் துணை இருக்க..
அடுத்தவனின் துணை எதற்கு..!
இதயத்திலே துணிவிருக்க..
வருத்தமிங்கே நமக்கெதற்கு..!
நம்மை நல்லவனா அளிக்க,
உத்தமனைப் போலாக்க….
எண்ணியவன் யார் என்று கண்டுக் கொள்ள
யாருண்டு..!
ஊரெல்லாம் நம் பேரைப் போற்றும் நாள் வரும்..
அது வரை முயற்சி செய்..
வேலையை நிறுத்தாமல் செய்..!
ஒரு மனிதன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான வழி
எல்லா விசயங்களும்….
நல்ல விசயங்களாக இருப்பதல்ல..!
ஒவ்வொரு விசயத்திலும்
இருக்கக்கூடிய
நல்லவற்றைக் காண்பது மூலம் தான்,
ஒருவன் மகிழ்ச்சியாக வாழ முடியும்..!
வாழ்க வளமுடன்
வாழ்வோம் நலமுடன்..!
Leave a Reply