நாளை (9) அனைத்து மருந்தகங்களும் பூட்டப்படும் என அகில இலங்கை மருந்தக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து பிரச்சினையை முன்னிறுத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தனியார் மருத்துவ சிகிச்சை நிலையங்களை தவிர்ப்பதற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் தீர்மானித்துள்ள நிலையில் அரச வைத்தியசாலைகள் செயற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.