இலங்கைசெய்திகள்

‘வாழைத்தோட்டம் பவாஸ்’ கொலை – வாள்களுடன் நால்வர் இன்று கைது!!

arrested

‘வாழைத்தோட்டம் பவாஸ்’ என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வாள்களுடன் 4 சந்தேகநபர்கள் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு காரொன்றில் வந்த சிலர், பவாஸைத் துரத்திச் சென்று வாளால் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.

‘வாழைத்தோட்டம் பவாஸ்’ என்பவர் குற்றச்செயல்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு சில காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டவர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைத்தோட்டம் பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் – சுடர்

Related Articles

Leave a Reply

Back to top button