பிரான்ஸின் வர்செய் (Versailles) நகருக்கே உரிய பழங்காலத்து வாசனைத் திரவியங்களை நுகர்ந்து அனுபவிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு.17ஆம் நூற்றாண்டின் மன்னராட்சிக் காலத்தில் பிரபலமாக இருந்த தோட்டங்கள் மீண்டும் கண்முன் அமைக்கப்பட்டுள்ளன.
Versailles Perfumers’ Gardens என்று அழைக்கப்படும் தோட்டங்களில் எங்கு திரும்பினாலும் பல வண்ணங்களில் நூற்றுக்கணக்கான மலர்கள்.அவற்றின் நறுமணம் பார்வையாளர்களைப் பழங்காலத்துக்கே அழைத்துச்செல்கிறது.
அதுபோன்ற தோட்டங்களில்தான் முதல்முதலில் பிரெஞ்சு வாசனைத் திரவியங்களை உருவாக்கும் தொழில் பிறந்ததாம்.பெரிய அளவில் தொற்றுநோய் ஏற்பட்டதால் அரண்மனையில் வேலைசெய்தவர்கள் உடலைச் சுத்தப்படுத்தத் தண்ணீரைப் பயன்படுத்த அஞ்சினர்.நீரால் தொற்று ஏற்படுமோ என்று பயம்.அவர்கள் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவைதான் அந்த வாசனைத் திரவியங்கள்.அதற்கான மலர்களைப் பார்த்துப்பார்த்து மன்னர் தேர்ந்தெடுத்தாராம்.