பல்வேறு துறைகளில் அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை மறுசீரமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த அதிகாரிகளின் ஓய்வு பெறும் கால எல்லையை 65 ஆக அதிகரிப்பதற்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்துள்ளார்.
தாதியர், விசேட வைத்தியர்கள், ரயில் சாரதிகள் உள்ளிட்ட துறைகள் இதில் அடங்குகின்றன.
கடந்த 31 ஆம் திகதி 30 ஆயிரம் அரச ஊழியர்கள் ஓய்வு பெற்றனர்.
நாடு மிகவும் நெருக்கடியான நிலையில் காணப்படுவதாகவும், அரச ஊழியர்கள் செயல் திறன் மிக்கவர்களாக செயல்படுவது அவசியமாகும்.
எதிர்காலத்தில் அரச ஊழியர்களுக்காகவும் அவர்களின் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காகவும் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டம் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.