ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, தலைமைப் பதவிக்குப் பொருத்தமற்றவர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பௌத்த தலைவரான கரு ஜயசூரியவை களமிறக்கவே ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டிருந்தார். வெற்றிக்கான வியூகங்களையும் வகுத்திருந்தார்.
ஆனால், கருவை களமிறக்கினால் தான் தனித்துப் போட்டியிடுவார் என ரணிலை சஜித் மிரட்டினார். சஜித் வேட்பாளராகக் களமிறங்கியதால்தான் ஜே.வி.பியின் ஆதரவும் கிடைக்கவில்லை.
ரணிலால் முடியாது என்ற கருத்தை மங்களவே உருவாக்கினார். ரணிலால் என்ன முடியாது? அவரை நம்பித்தான் தற்போது நாடு உள்ளது. தூரநோக்கு சிந்தனையுடைய தலைவரே அவர்” – என்றார்.