2022ஆம் ஆண்டுக்கான ஓஸ்கார் விருது வழங்கல் விழாவின் போது, தொகுப்பாளராக கிரிஸ் ரொக் செயற்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், நடிகர் வில் ஸ்மித்தின் மனைவியை அவமதிக்கும் வகையிலான வார்த்தையினை பிரயோகித்திருந்ததாக குறிப்பிடப்படுகிறது.
இதனையடுத்து, மேடைக்கு சென்ற நடிகர் வில் ஸ்மித், கிரிஸ் ரொக் மீது தாக்குதல் நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த சம்பவத்திற்காக வில் ஸ்மித் மன்னிப்பு கோரியிருந்தார்.