இலங்கைசெய்திகள்

ஒமிக்ரோன் தொற்று குறித்த மிக முக்கிய அறிவிப்பு!!

omicron

சுகாதார அதிகாரிகள், ஒமிக்ரோன் வைரஸ் திரிபு அறிகுறிகள் மிகவும் குறைவாக இருப்பதாக கூறுகின்றனர்.

அதற்கமைய, ஒமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலேசான இருமல், தடிமன் மற்றும் இலேசான தொண்டை நோவு போன்ற சில அறிகுறிகள் மட்டுமே இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அதிக காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் ஏற்படாது என்பது மற்றொரு முக்கிய விடயமாகும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக வைத்தியரை நாடுவதும் சிறந்ததென வலியுறுத்தப்படுகிறது.

இதேவேளை, நாடு முழுவதும் ஒமிக்ரோன் வைரஸ் திரிபு வேகமாக பரவி வருவதாகவும் நாளாந்தம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த வைரஸ் திரிபினால் பாதிக்கப்பட்ட அதிகளவானோர் அடையாளம் காணப்படுவதாகவும் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச மற்றும் குழந்தை நல மருத்துவர்கள் நிறுவகத்தின் செயலாளர் விசேட வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடு வழமைக்கு திரும்பியிருக்கும் நிலையில் மக்கள் தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதே இந்த நிலைமைக்கு முக்கிய காரணம் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலை தொடருமானால், ஒமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது எனவும் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button