கல்விமுக்கிய செய்திகள்

ஐவின்ஸ் தமிழ் செய்தி இணையதளம் நடாத்தும் சாதாரணதர மாணவர்களுக்கான கருத்தரங்கு எதிர்வரும் 20ம்திகதி ஆங்கில பாடத்துடன் ஆரம்பமாகிறது!!

O/L exam seminaar

Edwin Sangeeth Elalasingham
St.Michael’s College National School Batticaloa.
National Diploma In Teaching ( National Institute of Education) ,BA Social Science

ஐவின்ஸ்தமிழ் .கொம் இணையதளமானது தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களின் கருத்தரங்கு வெற்றியைத் தொடர்ந்து சாதாரணதர மாணவர்களின் நலன் கருதி முன்னணி ஆசிரியர்களை இணைத்து முற்றிலும் இலவசமான மாபெரும் கருத்தரங்குத் தொடரை முன்னெடுக்கவுள்ளது.

மேற்படி கருத்தரங்கானது சாதாரண தரப்பரீட்சையில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படும் எதிர்பார்க்கை வினாத்தாள்களைக் கொண்டதாக நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கில் இலங்கையின் முன்னணி ஆசிரியர்களே வளவாளர்களாக இணையவுள்ளனர்.

ஆங்கில பாடத்துடனான கருத்தரங்கின் ஆரம்பச் செயலமர்வு 20 – 01- 2022 வியாழக்கிழமை பி.ப 7.00 தொடக்கம் 9.00 மணிவரை பகுதி 1உம் 21- 01- 2022 வெள்ளிக்கிழமை பி.ப 7.00 தொடக்கம் 9.00 மணிவரை பகுதி 11 உம் என நடைபெறவுள்ளது.
ஆங்கில பாடத்திற்கான வளவாளரான திரு. எட்வின் சங்கீத் அவர்கள் சென். மைக்கல் கல்லூரியின் ஆங்கில பாட ஆசிரியராக பணியாற்றுகின்றார். இவர் கொழும்பு . விவேகானந்தா கல்லூரியில் கற்பித்தவராவார். கடந்தகால வினாத்தாள்களைப் பகுப்பாய்வு செய்து மாணவர்களுக்கான பயிற்சியை முன்னெடுக்கவுள்ளார்.

நாளைய தினம் ஆரம்பமாகவிருந்த இக்கருத்தமர்வு அனேக மாணவர்களின் மற்றும் ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்க 20ம் திகதி என பிற்போடப்பட்டுள்ளது. வினாத்தாள்களைப் பிரதி எடுத்தே இக்கருத்தமர்வில் பங்குபற்றவேண்டும் என்னும் நியதிக்கமைய இன்றைய தினமே பல மாணவர்கள் இதனைத் தெரிந்துகொண்ட காரணத்தினால் அவர்களுக்கான கால அவகாசத்தை வழங்கும் பொருட்டும் கருத்தரங்கு பிற்போடப்பட்டுள்ளது.

மாணவர்கள் சார்பிலும் இணையதளத்தின் சார்பிலும் வளவாளர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

20 ம்திகதி ஆரம்பமாகவுள்ள கருத்தரங்கின் முழுமையான நேர அட்டவணை நாளை உங்கள் பார்வைக்கு தரப்படும். சாதாரணதர கருத்தரங்கு குழுமத்தில் இணைவதற்கு கீழுள்ள லிங்கினை அழுத்தியோ அல்லது கீழுள்ள தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொண்டோ இணையமுடியும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம். https://chat.whatsapp.com/DY7TCzIU8HjBST2OJxf9O7 – +94 76 397 2847

Related Articles

Leave a Reply

Back to top button