இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கையில் நான்கு படிச்செயற் திட்டம் அறிமுகம்!!

Nutritional status

இலங்கையில் தற்போது மக்களின் போசாக்கு நிலை மந்த கதியில் உள்ள நிலையில் போசாக்கு தொடர்பான விசேட திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய போஷாக்கு மாதத்தின் ஆரம்பத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சு விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அனைத்து மாகாண செயலாளர்கள், சுகாதார செயலாளர்கள், சுகாதார சேவை பணிப்பாளர்கள், பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர்கள், வைத்திய சுகாதார அதிகாரிகள் மற்றும் அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இந்த விசேட சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து இலங்கையர்களும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அது தொடர்பான பிற சிக்கல்களில் இருந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக நான்கு படி செயல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நான்கு படிகள்: விழிப்புடன் இருப்போம், மாற்றுகளை கண்டுபிடிப்போம், நடுவோம், பகிர்வோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தோட்டக்கலை பயிற்சிகளில் ஈடுபடுவதற்கும், வீட்டு மட்டத்தில் கோழிப்பண்ணைகளை நிறுவுவதற்கும், நன்னீர் மீன் கைத்தொழில்களை ஊக்குவிப்பதற்கும், சாத்தியமுள்ள பகுதிகளில் கால்நடைகளை நிர்வகிப்பதற்கும், வீட்டில் பயிரிடப்படாத இடங்களைப் பயன்படுத்துவது பொருத்தமானது என சுகாதார அமைச்சு பொருத்தமான சுற்றறிக்கை மூலம் பரிந்துரைத்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button