அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக மக்களின் உணவுப் பழக்கத்தில் குறுகிய கால மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், ஊட்டச் சத்து குறைபாடு அல்லது போசாக்கின்மை நிலைமைகள் எதுவும் இதுவரையில் பதிவாகவில்லை என வயம்ப பல்கலைக்கழகத்தின் போஷாக்கு தொடர்பான பேராசிரியை ரேணுகா சில்வா தெரிவித்துள்ளார்.
மரக்கறி விலை அதிகரிப்பு காரணமாக அதற்கு பதிலாக மக்கள் மாற்று வழிகளை நாடுகின்ற போதிலும், அரிசியினது விலை அதிகரித்திருந்தாலும் அதன் நுகர்வு குறையவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறைந்த வருமானமீட்டும் குடும்பங்களை இலக்காகக் கொண்டு உலக உணவுத் திட்டத்துடன் இணைந்து வயம்ப பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வுக்காக தரவுகள் சேகரிக்கப்பட்டன.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, குறைந்த வருமானமீட்டும் குடும்பங்களில் உள்ள சிறார்களின் ஊட்டச்சத்தில் தற்போது தாக்கத்தை ஏற்படுத்தாத போதிலும், எதிர்காலத்தில் அது எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தீர்மானிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.