
பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது குறித்து வடகொரியத் தலைவர் கிம் ஜொங் அன் கருத்து தெரிவித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு தமது தந்தை காலமானதை அடுத்து, கிம் ஜொங் அன், வடகொரிய தலைமைத்துவத்தை ஏற்றார்.
இந்நிலையில், தாம் ஆட்சிப் பொறுப்பையேற்று 10 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் இடம்பெற்ற தமது கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் அவர் பொருளாதாரம் குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
மிக முக்கியான பேசுபொருளான, அணு ஆயுதம் மற்றும் அமெரிக்க விவகாரம் என்பனவற்றைத் தவிர்த்து, உழவு வண்டி உற்பத்தி, தொழிற்சாலைகள் மற்றும் பாடசாலை சீருடை என்பன குறித்து அவர் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
துரித பொருளாதார வளர்ச்சி மற்றும் பொதுமக்கள் வாழ்க்கையை மேம்படுத்தல் என்பன 2022 ஆம் ஆண்டின் பிரதான நோக்கங்களாகும் என்றும் வடகொரியத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.