இலங்கைசெய்திகள்

முக்கிய செய்திகளின் குறுந்தொகுப்பு!!

news

  1. தமிழ் தேசத்தை அங்கீகரிக்கும் தீர்வின் மூலமே இலங்கை தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி
  2. டிசம்பர் வரை விடுமுறையின்றிப் பாடசாலைகளை நடாத்த தீர்மானம்.
  3. போலந்து நாட்டவர் ஒருவர் தனது பயணப் பொதியில் 5Kg கொக்கேய்ன் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தமை தொடர்பில் இலங்கை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்கைனின் மொத்த மதிப்பு ரூ. 245 மில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  4. தடை நீக்கப்பட்ட புலம்பெயர் அமைப்புகள் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைக்கு பணம் அல்லது வேறு உதவிகள் செய்தால் மீண்டும் தடை உத்தரவு மீண்டும் விதிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
  5. மிக்-27 போர் விமானங்கள் கொள்வனவு விவகாரம் தொடர்பான விசாரணைக்காக ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க சிஐடியில் முன்னிலையாகியுள்ளார்.
  6. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகி 19 மாதங்கள் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த கவிஞர் அஹ்னப் ஜஸீம், தற்போது அரசாங்கத்தினால் “பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நபர்கள் ” ? என்னும் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார்.
  7. அளுத்கமவில் உள்ள பல்பொருள் அங்காடியில் இருந்து 3,100 ரூபா பெறுமதியான குழந்தைகளுக்கான பால் மாவைத் திருடிய குற்றச்சாட்டில் 30 வயதுடைய மீனவத் தொழில் புரியும் நபரொருவர் அளுத்கம பொலிஸாரால் நேற்றைய தினம் (16) கைது செய்யப்பட்டுள்ளார்.
    தனது ஒரு வயது எட்டு மாதமான குழந்தையின் பசியைப் போக்குவதற்காக இவ்வாறு பால்மாவைத் திருடியதாக அவர் அழுது கொண்டே பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
  8. வெலிக்கடை சிறைச்சாலையின் பெண் சிறைக் காவலர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
    சிறைச்சாலைக்குள் சந்தேகத்திற்குரிய மாத்திரைகள் சிலவற்றைக் கொண்டுச்செல்ல முயன்ற குற்றச்சாட்டில் சிறைக் காவலர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
  9. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு திரும்பி வரவுள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
  10. உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் இங்கிலாந்தின் கால்பந்து கிளப் அணியான Manchester United அணியை வாங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
  11. இலங்கையில் புலம்பெயர்ந்தோர் காரியாலயம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
  12. நாட்டை மீட்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களில் ஒன்றாக கொழும்பில் புலம்பெயர்ந்தோருக்கான அலுவலகம் அமைக்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தற்போது அமுலில் உள்ள அவசரகாலச் சட்டத்தை இந்த வார இறுதிக்குள் நீக்க முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
  13. சட்டவிரோதமாக கடல் வழியாக வெளிநாட்டுக்குச் செல்ல முயன்ற 10 பேர் இலங்கை கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
    தலைமன்னார்- குருசபாடு கடற்பரப்பில் வைத்து இவர்கள் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளனர்.
  14. திருத்தி அமைக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட முன்மொழிவு மூலம் மக்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
  15. வடக்கு மாகாண அதிகாரிகள் சிலருக்கு உடன் இடமாற்றம்.

Related Articles

Leave a Reply

Back to top button