இலங்கைசெய்திகள்

இலங்கையின் பிரபல பாடகி நீலா விக்ரமசிங்க காலமானார்!!

Neela Wickramasinghe

இத்தாலியின் மிலான் நகருக்கான இலங்கையின் புதிய துணை தூதுவராக பதவியேற்று சில நாட்களே கடந்திருந்த நிலையில் இலங்கையின் மூத்த பெண் பாடகியும் இசைக்கலைஞருமான நீலா விக்ரமசிங்க (Neela Wickramasinghe) திடீர் சுகவீனம் காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.

கடந்த 10 ஆம் திகதி அவர் மிலானோவுக்கான இலங்கையின் துணைத் தூதுவராக கடமைகளை பொறுப்பேற்றார். 71 வயதுடைய நீலா விக்ரமசிங்கவுக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மூன்று முறை சரசவிய விருது, ஜனாதிபதி விருது, சுமதி டெலி விருது, சோண்டா விருது மற்றும் வனிதா விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார். முன்னாள் இசை ஆசிரியரான அவர், 1974 ஆம் ஆண்டு வட இந்திய இந்துஸ்தானி பாரம்பரிய இசையைக் கற்று சங்கீத் விஷாரத பட்டமும் பெற்றார்.

இசைத்துறையில் 55 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தை கொண்ட அவர், பின்னணிப் பாடகியாக 60க்கும் மேற்பட்ட சிங்கள படங்களில் 100க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

“மாஸ்டர் சர்” போன்ற பிரபலமான சிங்களப் பாடல்களும் சிங்கள பாடகர் டி.எம். ஜயரத்னவுடன் பாடிய பாடல்களும் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

Leave a Reply

Back to top button