நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கு எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
ஜனாதிபதியின் பதவிக் காலத்தையும், நாடாளுமன்றத்தின் பதவி காலத்தையும் இரு வருடங்களுக்கு நீடிக்கப்பட வேண்டும். அதற்கான யோசனை முன்வைக்கப்படும் என்று டயானா கமகே எம்.பி. சபையில் நேற்று விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“தேர்தல்கள் உரிய காலப்பகுதியில் நடத்தப்படும். அவ்வாறு நடத்தித்தான் ராஜபக்சக்களுக்குப் பழக்கம். எனவே, நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் நீடிக்கப்படமாட்டாது. அதற்கான தேவையும் எழவில்லை. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மூன்றாண்டுகளுக்குள் நிறைவேற்றுவோம்” – என்றார்.
செய்தியாளர் – சுடர்