சினிமாசெய்திகள்

ஷூட்டிங்கின் போது நடிகை சைத்ரா ரெட்டிக்கு விபத்து!

saithrareddy

விஜய் டிவி-யில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் அறிமுகமான நடிகை சைத்ரா ரெட்டி, இவர் அந்த தொடரில் பிரியா பவானி ஷங்கருக்கு பதிலாக நடித்திருந்தார்.

அந்த தொடரை தொடர்ந்து சைத்ரா ரெட்டி ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி தொடரில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.

மேலும் தற்போது சைத்ரா ரெட்டி சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் கயல் என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கயல் தொடரின் ஷூட்டிங் போது அவருக்கு அடிபட்டதாகவும், அவரின் பைக்கில் இருந்து கீழே விழுந்ததாகவும் பதிவிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button