இலங்கைசெய்திகள்

குருநாகலில் திறந்தவெளியில் திரைப்படம்!!

Movie

கொரோனா தொற்று மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் சோர்வடைந்த மக்களுக்கு பொழுதுபோக்கை வழங்குவதற்காக திறந்தவெளியில் இலவச திரைப்படங்களைக் காண்பிக்கும் திட்டத்தை, ஈ.ஏ.பி. திரைப்பட நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

அதன்படி, அதன் முதலாவது திரைப்படக் காட்சி எதிர்வரும் 27ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு குருநாகல் உடவல்பொல விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

ஹேமல் ரணசிங்க நடித்த ‘ஆஷாவரி’ மற்றும் ரஞ்சன் ராமநாயக்க நடித்த ‘மாயா’ ஆகிய இரண்டு படங்களும் இங்கு இலவசமாக திரையிடப்படும்.

திரைப்படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் மக்களுடன் இணைந்து படம் பார்ப்பதில் பங்கேற்பதுதான் இதன் சிறப்பம்சம் என தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button