மனித வாழ்க்கையை நமக்குத் தந்தவர்களும் அதை மணம் பெற செய்பவர்களும் தாயும் பெண்களும் தான் – போவி
ஒரு சிறந்த தாய் நூறு ஆசிரியர்களுக்கு சமமானவள் – ஹெர்பர்ட்
தாயின் இதயம் தான் குழந்தையின் முதல் பள்ளிக்கூடம் – பிச்சர்
கடவுள் எங்கும் நிறைந்திருக்க முடியாது என்பதால் தான் தாய்மார்களை படைத்துள்ளான் – ஜார்ஜ் எலியட்
எனது அம்மா ஒரு கடின உழைப்பாளி. அவர் தலைகீழாக நின்றேனும் ஒரு காரியத்தை செய்து முடிப்பார். மேலும் அவர் மகிழ்ச்சியாக இருக்க ஒரு வழியை கண்டறிந்துள்ளார். ‘மகிழ்ச்சி என்பது உங்கள் சொந்த பொறுப்பு’ என்று அவர் எப்பொழுதும் சொல்வார் – கார்னர் ஜெனிஃபர்.
நான் கீழே விழும் போது எனக்கு உதவ ஓடி வருவார், ஒரு அழகான கதையை சொல்லி என் வலியை மறக்கச் செய்வார், காயங்களை குணமாக்க அவ்விடத்தில் முத்தங்களை பொழிவார், அவர் யார்? அவர் தான் என் அம்மா – ஆன் டெய்லர்.
அறிவின் தாயகமாய் அருள் நிறைந்த உள்ளமாய் இருப்பவள் பெண் – ஜெயகாந்தன்
சமூகத்தின் எதிர்காலம் தாய்மார்களின் கைகளில் உள்ளது – டிபூ போர்ட்
இருப்பது ஒரு பிடி அன்னமாயிலும் தனக்கென இல்லாது பிள்ளைக்கு ஊட்டி மகிழ்பவளே தாய் – கண்ணதாசன்
உங்களிடம் சொல்ல முடியாத அளவுக்கு உறுதியான செல்வம், தங்க நகைப் பெட்டகங்கள் மற்றும் தங்க கருவூலங்கள் என எல்லாம் இருக்கலாம். ஆனால் ஒருபோதும் நீங்கள் என்னை விட பணக்காரனாக முடியாது. அனைத்து செல்வங்களை விட உயர்ந்த, என்னை படிக்க வைத்த ஒரு தாய் என்னிடம் இருந்தாள் – ஸ்டிரிக்லேண்ட் கில்லன்.
வாழ்வில் நமக்கு சொந்தம் என்று சொல்லக்கூடிய சொத்து தாயும் அவளது பாசமுமே – கோல்டன்
விளக்கு நமக்கு எத்தனை வண்ணமாக உதவி செய்கிறது என்பதை நாம் அது இல்லாதபோது தான் உணர முடியும். தாய் நம்மை எப்படியெல்லாம் வளர்க்கின்றாள் என்பதை தாய் இல்லாத போது தானே உணர முடிகிறது. – கிருபானந்த வாரியார்
ஆறு தரம் பூமியை வலம் வருதலும், பதினாராயிரம் தடவை காசியில் குளித்தலும், பல நூறு தடவை சேது ஸ்நானம் செய்தாலும் ஆகிய இவற்றால் கிடைக்கும் புண்ணியம், தாயைப் பக்தி பூர்வமாக ஒரு தரம் வணங்கினால் கிடைக்கும். – கிருபானந்த வாரியார்
நான் எனது தாயின் பிரார்த்தனைகளை நினைவு கூருகின்றேன் அவை எப்பொழுதும் என்னைப் பின்தொடர்கின்றன. அவை வாழ்நாள் முழுவதும் என்னை பாதுகாப்பு அரணாக பற்றிக் கொண்டுள்ளன. – ஆப்ரஹாம் லிங்கன்.