கவிதைமுத்தமிழ் அரங்கம்.

சமூகசேவையாளனுக்கு வாழ்த்துப்பா!!

birthday

பரணியிலே வந்துதித்து
பவள விழா காணுகின்ற
பண்பு மிகு நாயகனாம்
பொன். கந்தையா ……

மட்டுவில் மண்பெற்ற
மாதருள் மாணிக்கம்…
கல்விக்கு கரம் கொடுக்கும்
காருண்ய பேராளன்….

தாய் மண்ணை நேசிக்கும்
தமிழன்னை தவப்புதல்வன்
ஊர் வாழ கொடுக்கின்ற
உன்னத அருளாளன்…

பார் போற்ற நீர் வாழ
பகிர்கின்றோம்
வாழ்த்துகளை
பாசத்துடன்….இந்நாளில்

வளர்மதி உருவாக
வழி தந்த நின் குடும்பம்
நிறைவோடு மகிழ்வு பெற்று
நீடூழி வாழட்டும்.

மனமகிழ்ச்சி தேகசுகம்
குறைவிலா புன்னகை
குன்றாது தொடரட்டும்
கொடையாளன் தங்களுக்கு

வாழ்த்தும் வணக்கமும்
வள்ளலுக்கு பரிசாக்கி
இந்நாள் போலவே
எந்நாளும் ஆகிட
மீண்டும் மொழிகிறோம்
எங்கள் வாழ்த்துக்களை….

சமூகஆர்வலர்கள்
மட்டுவில்

Related Articles

Leave a Reply

Back to top button