இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்

முள்ளிவாய்க்கால் குறுந்தடி பகுதியில் இராணுவத்தினர் குவிப்பு

முள்ளிவாய்க்கால் –  குறுந்தடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் புதையல் இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் அப்பகுதியில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புதையல் இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களுக்கு அமைய 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் அப்பகுதியில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே அப்பகுதியில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சம்பவம் தொடர்பில் குறுந்தடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத் தலைவர் முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவகருக்கு தகவல் வழங்கியுள்ள நிலையில், கடிதமொன்றினையும் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button