இலங்கைசெய்திகள்

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

Demonstration

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், ஊடக அமையம் மற்றும் மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இணைந்து முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை பகுதிகளில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு காந்தி பூங்கா அருகில் உள்ள ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபி அருகே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும், ஊடகவியலாளர்கள் அச்சமின்றி தமது பணிகளை முன்னெடுப்பதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும், என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button