செய்திகள்தொழில்நுட்பம்

கையடக்கத் தொலைபேசி விற்பனையில் வீழ்ச்சி!!

Mobile phone

இறக்குமதி பொருட்களுக்கான கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்துள்ள நிலையில் புதிய கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கை 80 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அதற்குப் பதிலாக கையடக்கத் தொலைபேசி திருத்தப்பணிகள் 118 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான பின்னணியில் கையடக்க தொலைபேசி தொழில்துறை கடும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் சமித் செனரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button