டொலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் பால்மாவுக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் உள்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால்மா என்பவற்றிற்கான தட்டுப்பாடு நிலவுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவ்வாறு பால்மாவுக்கான பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து பால்மாவுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
பின்னர் பால்மாவை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள் என்பன பால்மாவுக்கான விலையை அதிகரித்திருந்தன.
அத்தோடு டொலர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு வழங்கி பால்மா இறக்குமதியாளர்களுக்கு டொலர் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இவ்வாறான பின்னணியில் மீண்டும் பால்மாவுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.