
நேற்று(03) இரவு, பசறை – கோணக்கலை, வீரன்புறம் பகுதியில் உள்ள வீடொன்றில் எரிவாயு கொள்கலனுடன் தொடர்புடைய தீப்பரவல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கொள்கலனிலிருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டு, ரெகுலேட்டர் பகுதியில் இருந்து அடுப்புக்குப் பொருத்தப்படும் குழாய் பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த வீட்டிலுள்ளவர்கள், பாதுகாப்பான முறையில் தீயை அணைத்து, வெடிப்பு ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுத்ததாக தெரியவருகிறது.