இலங்கைசெய்திகள்

இலங்கையை மீட்டெடுக்க புதிய ஆட்சி வேண்டும் – மைத்திரி பகிரங்கமாகத் தெரிவிப்பு!!

Maithripala

நாட்டின் தற்போதைய குழப்பத்தில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் நோக்கில் புதிய தொலைநோக்குப் பார்வை கொண்ட புதிய ஆட்சியை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார்.

முன்மொழியப்பட்ட விதி இதுவரை இருந்த பாரம்பரிய அரச வடிவங்களில் இருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கோட்டை தேர்தல் அமைப்பின் நேற்றைய கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடு இதுவரை இல்லாத பாரிய நெருக்கடிக்குள் தள்ளபட்டுள்ளது. நாடு தற்போது உணவுப் பற்றாக்குறையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. இன்னும் ஓரிரு மாதங்களில் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும்.

எந்தவொரு கட்சியும் தனித்து அரசை அமைக்கவில்லை. தற்போதைய அரசுக்கு 69 இலட்சம் வாக்குகளை வழங்குவதற்கு 12 அரசியல் கட்சிகள் பங்களிப்பை வழங்கியுள்ளன.

இன்று சமூக, அரசியல் மற்றும் சர்வதேச துறைகளில் நெருக்கடியைக் காண்கின்றோம். மேலும் சர்வதேச உறவுகளை நிர்வகிப்பதில் பரிதாபகரமான தோல்வி உள்ளது. ஊழல், மோசடிகள் காரணமாக சர்வதேச சமூகத்தைச் சேர்ந்த எவரும் அதைக் காப்பாற்ற வரமாட்டார்கள்.

அண்மையில், மேற்கத்தேய தூதரகத்தின் தூதுவர் ஒருவர் எனது இல்லத்துக்கு வந்து என்னைச் சந்தித்தபோதே இதைக் கூறினார்.

ஐ.நா. அமைப்பு மற்றும் உலக வங்கி மூலம் மேற்கத்தேய நாடுகள் மட்டுமே இலங்கைக்கு தங்கள் உதவிகளை வழங்கும்.

இடதுசாரி சாய்வு, முற்போக்குக் சக்திகள் உள்ளடக்கிய அரசியல் உருவாக்கத்தை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியம்” – என்றார்.
செய்தியாளர் – சுடர்

Related Articles

Leave a Reply

Back to top button